Posts

குரங்கும் முதலையும்‏ | The Monkey and The Crocodile Story

Image
குரங்கும் முதலையும்‏ | The Monkey and The Crocodile Story ஒரு கடற்கரையிலே பெரிய நாவல்மரம் ஒன்றிருந்தது. அதில் எப்பொழுதும் பழங்கள் இருந்துகொண்டேயிருக்கும். அந்த மரத்தில் ரக்தமுகன் என்றொரு குரங்கு இருந்துவந்தது. ஒருநாள் கராலமுகன் என்ற பெரிய முதலை ஒன்று அந்த நாவல் மரத்தின் அருகில் வந்தது. ரக்தமுகன் அதைப் பார்த்து, ‘‘நீ என் விருந்தாளி. அமுதத்துக்கொப்பான நாவற்பழங்களைத் தருகிறேன். சாப்பிடு!’’ என்று குரங்கு கூறி, நாவற்பழங்களை முதலைக்குக் கொடுத்தது. பழங்களை முதலை சாப்பிட்டது. வெகுநேரம் குரங்குடன் பேசி இன்பமடைந்தபின் தன் வீட்டுக்குத் திரும்பிச் சென்றது. இப்படியே நாள்தோறும் முதலையும் குரங்கும் நாவல்மரத்தின் நிழலையடைந்து நல்ல விஷயங்களைப் பற்றிப் பேசி இன்புற்றுக் காலம் கடத்தி வந்தன. தான் சாப்பிட்டதுபோக மிஞ்சிய நாவற்பழங்களை முதலை வீட்டுக்குக் கொண்டுபோய் தன் மனைவிக்குக் கொடுத்து வந்தது. ஒருநாள் முதலையின் மனைவி, ‘‘அமிருதம் போலிருக்கும் இந்த நாவற்பழங்கள் உங்களுக்கு எங்கே கிடைக்கிறது?’’ என்று முதலையைக் கேட்டது. ‘‘அன்பே, ரக்தமுகன் என்றொரு குரங்கு இருக்கிறது. அது என் நெருங்கிய நண்பன். அதுதா...

முட்டாள் சிங்கமும் புத்திசாலி முயலும் | The Foolish Lion and the Clever Rabbit

Image
முட்டாள் சிங்கமும் புத்திசாலி முயலும் | The Foolish Lion and the Clever Rabbit அடர்ந்த காட்டில் ஒரு கர்வம் கொண்ட சிங்கம் வாழ்ந்து வந்தது. நான் தான் இந்த காட்டுக்கு ராஜா என்ற கர்வத்துடன் அந்த சிங்கம் காட்டில் வாழ்ந்த அனைத்து மிருகங்களையும் வேட்டையாடியது. மற்ற சிங்கங்கள் உணவுக்காக வேட்டையாடும். அனால் இந்த சிங்கம் பொழுதுபோக்கிற்காக வேட்டையாடியது. இதனால் காட்டில் வாழ்ந்த மற்ற மிருகங்கள் சிங்கத்தின் மீது கோபம் கொண்டன. ஒவ்வொருநாளும் சிங்கம் பல மிருகங்களை வேட்டையாடியது. இதனை கண்ட மற்றைய மிருகங்கள் மிக்க பயத்துடன் வாழ்ந்து வந்தன. சிங்கம் இப்படி பல மிருகங்களை ஒவ்வொருநாளும் கொல்வதால் தாம் வெகு சீக்கிரமே இறந்துவிடுவோம் என எண்ணி அவை எல்லாம் ஒன்றுகூடி ஆலோசனை செய்தது. சிங்கத்தை எதிர்த்து அவைகளால் போராட முடியாது என்பது அவைகளுக்குத் நன்கு தெரியும். அதனால் அவை சிங்கத்திற்கு இரையாக தினம் ஒரு மிருகமாக போவதற்கு தீர்மானித்தன. அடுத்தநாள் குரங்கு ஒன்று அந்த கர்வம் கொண்ட சிங்கத்தை சந்திக்க அதன் குகைக்கு சென்றது. இதைக்கண்ட சிங்கம் முகுந்த கோபத்துடன் உறுமியது. குரங்கிற்கு பயம் வந்துவிட்டத...